தக்கலை : பெண்ணிடம் அத்துமீறிய போலீஸ்காரர் கைது

X
தக்கலை பகுதியை சேர்ந்தவர் அல் அமீன் (27). இவர் மணிமுத்தாறு ஆயுதப்படை போலீசாக பணியில் உள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை. அல் அமீன் மீது கொற்றிக் கோடு போலீஸ் நிலையத்தில் ஒரு இளைஞரை தாக்கிய வழக்கு உள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, முன்ஜாமீன் பெற்று தினமும் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று மது போதையில் இருந்த அல் அமீன் 38 வயதுடைய ஒரு பெண்ணின் கையை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயற்சி செய்தார். இதனை பெண் கண்டித்ததால் பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பெண் கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அல் அமீன் மீது வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர்.
Next Story

