காதலியை மிரட்ட தூக்கில் தொங்கிய வாலிபர் சாவு

காதலியை மிரட்ட தூக்கில் தொங்கிய வாலிபர் சாவு
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம்  நித்திரவிளை, எடப்பாடு பகுதியை சேர்ந்தவர் ஜெய சங்கரன் (23). கல்லூரி மாணவர். இவர் கொல்லங்கோடு  பகுதி சேர்ந்த 20 வயதான உறவுக்காரப் பெண்ணை காதலித்து வந்துள்ளனர். காதலுக்கு இரு வீட்டாரும்  சம்மதம் தெரிவித்தனர். காதலர்கள் இருவரும் போன் பேசும் போது அடிக்கடி சிறுசிறு வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சரியாகிவிடுவது வழக்கம்.  இந்த நிலையில் நேற்று முன்தினம்  மதியம் ஜெய்சங்கரன் காதலியுடன் whatsapp வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த போது,  காதலர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. உடனே ஜெய்சங்கரன் காதலியை  பயப்படுத்த வேண்டி வீடியோ காலில் இருந்தபடியே மேல் மாடியில் சென்று போர்வையல் உத்திரத்தில் தூக்கு மாட்டியுள்ளார். இதில் எதிர்பாராத விதமாக கழுத்து இறுகிய நிலையில் ஜெய்சங்கரன் பரிதாபமாக இறந்தார். வீட்டில் உள்ளவர்கள் போன் நம்பர் தெரியாத காதலிக்கு உடனடி தகவல் தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையில் மேலே சென்ற தாயார் மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து, நித்திரவிளை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். போலீசார் உடலை கைப்பற்றி குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story