சிறந்த பேரூர் செயலாளர் விருது முதலமைச்சர் வழங்கினார் 

சிறந்த பேரூர் செயலாளர் விருது முதலமைச்சர் வழங்கினார் 
X
கிள்ளியூர்
திமுக தலைமை கழகம் சார்பில் கட்சிப் பணியில் சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சி தி மு க  செயலாளர் சத்யராஜ் தமிழகத்தின் சிறந்த பேரூர் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். இவருக்கு நேற்று கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் சிறந்த பேரூராட்சி செயலாளர் விருதை வழங்கினார். சத்யராஜுக்கு திமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Next Story