துறைமுகத்தில் மூன்று பேர் பலி நிவாரணம் கேட்டு போராட்டம்

துறைமுகத்தில் மூன்று பேர் பலி நிவாரணம் கேட்டு போராட்டம்
X
தூத்துக்குடி மிதவை கப்பலில் விஷவாயு தாக்கி மூன்று கப்பல் மாலுமிகள் நேற்று பலியான நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மிதவை கப்பலில் விஷவாயு தாக்கி மூன்று கப்பல் மாலுமிகள் நேற்று பலியான நிலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 4 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் மற்றும் மீனவ பிரதிநிதிகள் கப்பல் மாலுமிகள் சங்கத்தினர் ஆகியோர் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரி மனு நான்கு மாவட்ட மீனவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக எச்சரிக்கை தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நேற்று சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனமான எம் எம் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு கல் ஏற்றி மாலத்தீவு கொண்டு செல்வதற்காக வந்த ஒரு சிறிய ரக மிதவை கப்பலில் அடிப்பகுதியில் ஏற்பட்ட விஷ வாயு காரணமாக அந்த கப்பலில் பணியில் இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சந்திப் குமார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலை சேர்ந்த ஜெனிஸ்டன் தாமஸ் நெல்லை மாவட்டம் உவரி பகுதியைச் சேர்ந்த சிரோன் ஜார்ஜ் உள்ளிட்ட மூன்று கப்பல் மாலுமிகள் விஷவாயுத்தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர் இதை தொடர்ந்து அவர்கள் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது இறந்த மூன்று கப்பல் மாலூமிகளுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இறந்த கப்பல் மாலுமிகளின் குடும்பத்தினர் மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கத்தினர் மீனவர் பிரதிநிதிகள் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர் இதைத்தொடர்ந்து தனியார் கப்பல் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது இந்த பேச்சுவார்த்தையில் கப்பல் நிறுவனம் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை இதை தொடர்ந்து பலியான மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கத்தினர் மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் கோரிக்கை மனு அளித்தனர் இதில் இந்த மாலுமிகள் பலியானதற்கு காரணமாக இருந்த தனியார் நிறுவனமான எம்எம் ஷிப்பிங் நிறுவனத்தின் மீது மற்றும் அந்த மிதவை கப்பலின் கேப்டன் மீது உரிய வழக்கு பதிவு செய்து அந்த மிதவை கப்பலை தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளியே செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விஷ வாயு தாக்கி பலியான மூன்று பேரின் குடும்பத்திற்கும் தலா 4 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் உரிய இழப்பீடு வழங்கும் வரை பலியான மீனவர்களின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர் மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் காவல்துறை உடனடியாக தலையிட்டு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர் மேலும் இதற்கு நடவடிக்கை எடுக்க விட்டால் தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்ட மீனவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.
Next Story