சாலை விபத்தில் தாய் பலி. மகள் படுகாயம்

சாலை விபத்தில் தாய் பலி. மகள் படுகாயம்
X
மதுரை மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் தாய் பலி. மகள் படுகாயம் அடைந்தார்
மதுரை மேலூர் அருகே உள்ள ஆட்டுக்குளத்தைச் சேர்ந்த மகாராஜா என்பவரின் மனைவி அருணா தேவியும் ( 53) மகள் நிவேதாவும்(26) டூவீலரை நிவேதா ஓட்ட வாகனத்தில் பின்னால் அருணாதேவி அமர்ந்து சென்றுள்ளனர். மேலூர் 4 வழி சாலையில் கூத்தப்ப்பன்பட்டி அருகே சென்றபோது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் ஒன்று டூவீலர் பின்னால் மோதியதில் தாயும் மகளும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அருணா தேவி உயிரிழந்தார். நிவேதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story