வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

மதுரை திருமங்கலம் பகுதி விவசாயிகளின் பாசன வசதிக்காக இன்று வைகை அணையிலிருந்து அமைச்சர் மூர்த்தி தண்ணீர் திறந்து விட்ட நிகழ்வு நடைபெற்றது
வைகை அணையிலிருந்து பெரியார் பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கு மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 19,439 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1130 கன அடி விகிதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும் , 75 நாட்களுக்கு முறை வைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு 8,493 மில்லியன் கன அடி தண்ணீரை இன்று (செப்.18) காலை வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். உடன் மதுரை,தேனி ஆட்சியர்கள்,தங்க தமிழ் செல்வன் எம்.பி, சேடப்பட்டி மணிமாறன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
Next Story