ராசிபுரம் அருகே பாவை தனியார் கல்லூரி சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி: நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு..

ராசிபுரம் அருகே பாவை தனியார் கல்லூரி   சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி: நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு..
X
ராசிபுரம் அருகே பாவை தனியார் கல்லூரி சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி: நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள (பாவை)தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது. இந்த பேரணியை புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் திருமதி கோமதி, அவர்கள் மற்றும் பாவை கல்லூரி நிறுவனங்களின் நிறுவனர், தலைவர் சி.ஏ.என்.வி. நடராஜன், மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தனர். பேரணியில் புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்குகள் மற்றும் நோய் அதன் மூலம் ஏற்படும் உடல் உபாதைகளை குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியானது கல்லூரியில் இருந்து தொடங்கி பாச்சல் சாலை நாமக்கல் சாலை இறுதியாக புதுச்சத்திரம் காவல் நிலையம் வரை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர். மேலும் இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் B.V.மகேஸ்வரன், மாணவர் ஒருங்கிணைப்பாளர்கள் : 4th year AI&ML - R.பரத் குமார். 4th year Cyber security D.ஹேமஶ்ரீ, 3th year AI&DS - P.யோகராஜன், 3th year AI&ML - ரித்திகா, உள்ளிட்ட பலர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story