மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கும் கனமழை

X
மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கும் கனமழை. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம்,படாளம், கருங்குழி,சோத்துப்பாக்கம், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கும் கனமழை. காஞ்சிபுரம், நீலகிரி,செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கனமழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை முதல் வெயிலின் தாக்கம் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து இருந்த நிலையில் தற்பொழுது மதுராந்தகம் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியுள்ளது.
Next Story

