மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்

மருமகளை கல்லால் தலையில் தாக்கிய மாமியார்
X
திருவட்டார்
குமரி மாவட்டம் வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் பிரின்ஸ் என்பவர் மனைவி மஞ்சு. இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். பிரின்சுக்கு குடிபழக்கம் உள்ளதாக தெரிகிறது.  வரதட்சணை சம்பந்தமாக இவர்களுக்குள் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம்  இரவு குடிபோதையில் வந்த கணவர் பிரின்சுக்கும் மனைவி மஞ்சுவுக்கும் திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது மாமியார் அல்போன்சாள் மருமகள் மஞ்சு விடம் தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரத்தில்  கல்லால் மஞ்சுவின் தலையில் சரமாரியாக தாக்கியதில்  அவரது காது கிழிந்தது. அக்கம் பக்கத்தினர்  மஞ்சுவை மீட்டு,  தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவட்டார்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story