இட ஒதுக்கீடு தியாகிகள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இட ஒதுக்கீடு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது
பாட்டாளி மக்கள் கட்சி நாமக்கல் மேற்கு மாவட்டம் குமாரபாளையம் தெற்கு நகரத்தின் சார்பாக, செப்டம்பர் 17 இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு குமாரபாளையம் ஆனங்கூர் பிரிவு சாலையில் நடைபெற்றது. குமாரபாளையம் தெற்கு நகர செயலாளர் செல்லமுத்து,பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் கே.உமாசங்கர் பங்கேற்றார்.. முன்னாள் மாநில துணை செயலாளர் பழனிவேல், வடக்கு நகர தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் வி.வி.வெங்கடாசலம் ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரோஜா, பள்ளிபாளையம் மேற்கு ஒன்றிய தலைவர் பம்பாய் முருகன், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.சி.முருகேசன் ,மாவட்ட மாணவரணி தலைவர் செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story