அரை மணி நேர கனமழை மாணவியர் விடுதியைச் சூழ்ந்த மழை நீர்மாலை விடுமுறை காத்திருந்து விடுதிக்கு திரும்பிய மாணவிகள்

அரை மணி நேர கனமழை மாணவியர் விடுதியைச் சூழ்ந்த மழை நீர்மாலை விடுமுறை காத்திருந்து விடுதிக்கு திரும்பிய மாணவிகள்
X
திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான  கொல்லப்பட்டி, வாலரை கேட், கூட்டப்பள்ளி, தோக்கவாடி, காடச்சநல்லூர், கேஎஸ்ஆர் கல்வி நகர் வரகூராம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை அரை மணி நேரமாக திடீர் கன மழை பெய்தது. மாணவமாணவிகள் வீடுகளுக்கும்விடுதிகளுக்கும்சொல்ல முடியாமல் அவதி
திருச்செங்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை அரை மணி நேரமாக திடீர் கன மழை பெய்தது.நகரப் பகுதிகளில் ரோடுகளில் மழைநீர்ஆறு போல் ஓடியது.காலை முதல் வெயில் கடுமையாக அடித்த நிலையில் மாலையில் பெய்த மழை குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தியது.கனமழையின் காரணமாக பட்டறை மேடு, தொண்டிக்கரடு,கைலாசம்பாளையம் செங்கோடம் பாளையம் உள்ளிட்டபகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர் வடிகால்கள் வழியாக தெப்பக்குளம் ரோடு ஈரோடு ரோடு பகுதிகளில் சென்று கூட்டப்பள்ளி ஏரிக்கு செல்வது வழக்கம். சாதாரண மழையாக இருந்தாலும் தாழ்வான பகுதியாக உள்ள இந்த பகுதியில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி ஓடுவதும் தொடர்கதையாக உள்ளது. சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, சமூக நல மாணவியர் விடுதி, வேளாண்மை துறை அலுவலகம்,ஆவின் பால் நிறுவனம் என பல கட்டடங்கள் இருந்த போதும் ரோட்டில் ஆறு போல் தண்ணீர் ஓடுவதால் அந்தந்த கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகாமல் தடுப்புகள் ஏற்படுத்தப் பட்டிருக்கிறதே தவிர இருசக்கர வாகனங்கள் செல்லவோ நான்கு சக்கர வாகனங்கள் செல்லவோ ரோட்டில் தண்ணீர் ஓடாத நிலையை ஏற்படுத்தவோ முடியாத சூழல் நிலவுகிறது.சமூக நல மாணவியர் விடுதியில்சுமார் 100 மாணவிகள் தங்கி படித்து வரும் நிலையில் இன்று மழை விட்டும் விடுதி அருகே தண்ணீர் ஆறு போல் ஓடியதால் தண்ணீர் வடியும் வரை காத்திருந்து விடுதிக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது இது தொடர்கதையாக இருப்பதாகவும் தண்ணீர் சூழ்ந்த பகுதியில் மாணவர் விடுதி இருப்பதாலும் பாதுகாப்பற்ற சூழல் இருப்பதாக சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். மாற்று ஏற்பாடுகள் செய்துதண்ணீர் தேங்காமல் ரோடுகளில் ஓடாமல் ஏரியில் கலக்க ஏற்பாடுகள் செய்தால் அந்தந்த பகுதியில் இருப்பவர்கள் தங்களது பகுதிக்குள் வேற்றுப்பகுதி உடைய மழைநீர் வர வேண்டாம் என போராடுவதால் இது போன்ற நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் நகராட்சி நிர்வாகம் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுத்து மாற்று ஏற்பாடுகள் காண வேண்டும் என்பது பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
Next Story