வட்டாட்சியர் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

செட்டிக்கரை RPRS திருமண மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வட்டாட்சியர்கள் சௌகத்அலி தொடக்கி வைத்தனர்.
தருமபுரி செட்டிக்கரை தனியார் திருமண மஹாலில் நேற்று வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை வட்டாட்சியர் சௌகத்அலி துவங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். மேலும், முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக இத்திட்ட முகாமில் பயனாளிகளுக்கு பட்டாமாறுதலுக்கான ஆணைகள், பிறப்பு சான்றிதழ்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட வேலைக்கான அடையாள அட்டைகள், வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் உட்பட பல துறை அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Next Story