அஞ்செட்டிகூலித்தொழிலாளி குத்திக்கொலை

X
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே உள்ள தொட்டமஞ்சு மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன் (35) கூலித்தொழிலாளியான. இவரது மனைவி மாதேவி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாதப்பன், அங்குள்ள ஒரு கடை முன்பு நின்று இருந்தார் அப்போது மாதப்பனின் உறவினரான மாரப்பா (30) என்பவர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மாதப்பனை மார்பு பகுதியில் சரமாரியாக குத்தியதில் உயிரிழந்தார். மாரப்பா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சைனை இருக்காலலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

