கிருஷ்ணகிரி அருகே டூவீலரில் மது விற்ற தொழிலாளி கைது.

X
கிருஷ்ணகிரி அருகே டூவீலரில் மது விற்ற தொழிலாளி கைது. கிருஷ்ணகிரி மதுவிலக்கு போலீசார் சென்னசந்திரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வயல்வெளியில் டூவீலரில் ஒருவர் மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்த போது அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில் ஆவல்நத்தம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியப்பன் (55) என்பவர் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 50 மதுபாட்டில்கள், மற்றும் மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
Next Story

