புதுக்கோட்டை: மகளிர் கல்லூரியில் கலைத் திருவிழா

புதுக்கோட்டை நேற்று (செப்.18) கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பேரவைத் தொடக்க விழாவும் கலைத் திருவிழாவும் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் கி.நிர்மலா தலைமை வகித்தார். திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் கா.ராதாகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். தேர்வு நெறியாளர் ஞானஜோதி வாழ்த்திப் பேசினார். தமிழ்த் துறைத் தலைவர் சாந்தி வரவேற்றார். பல மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
Next Story

