சந்தைமேடு ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்

சந்தைமேடு ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்
X
சந்தைமேடு ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்
ராணிப்பேட்டை மாவட்டம் சந்தைமேடு பகுதியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கூடும் ஆட்டுச் சந்தை இன்று (செப். 19) நடைபெற்றது. சந்தையில் ஆடுகளை வாங்கவும், விற்கவும் பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் குவிந்தனர். ஒரு ஆட்டின் விலை அதன் எடைக்கு ஏற்றவாறு ரூ.6,500 முதல் ரூ.18,500 வரை விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும், புரட்டாசி மாதம் என்பதால் ஆடுகளின் விற்பனை மந்தமாக இருந்ததாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story