கோவையில் வெள்ளத்திலிருந்து தப்பிக்கும் ஒத்திகை !
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, கோவை சூலூர் சின்னக்குளம் பகுதியில் தீயணைப்பு மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து வெள்ளத்திலிருந்து தப்பிக்கும் முன்னெச்சரிக்கை ஒத்திகை நடத்தினர். திடீர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, பொதுமக்கள் அருகிலுள்ள பொருட்களை பயன்படுத்தி தப்பிப்பது போன்ற முறைகள் தத்ரூபமாக செய்து காட்டப்பட்டன. தீயணைப்பு நிலை அலுவலர் ராமசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆர்வமுடன் கண்டு களித்தனர். ஒத்திகை முடிவில், தற்காப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
Next Story



