கோவை: வாக்குச்சீட்டு சீர்திருத்தம் அவசியம் - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி !

கோவை: வாக்குச்சீட்டு சீர்திருத்தம் அவசியம் - தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி !
X
திமுக மீது கடுமையான விமர்சனம் வைத்த தமிழிசை ஜிஎஸ்டி, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வாக்குச்சீட்டு சீர்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்.
கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், சிபி. ராதாகிருஷ்ணன் துணை குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை தமிழரின் பெருமை எனக் குறிப்பிட்டார். திமுக தமிழ் இனத்திற்கு ஆதரவளிக்காத கட்சி, இனி “No Re-Entry for DMK” எனவும் கூறினார். ஜிஎஸ்டி பொருளாதாரப் புரட்சியை உருவாக்கியதாக பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனை பாராட்டிய அவர், ஸ்டாலின் மத்திய அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். உதயநிதி செங்கலை தூக்கினாலும் பாஜக செங்கோலை வைத்திருக்கும் என்றும் சாடினார். திமுக காங்கிரசிடம் சரணடைந்துவிட்டது, ஊழல் குற்றச்சாட்டு உள்ள அமைச்சர்கள் உள்ளனர் என குற்றஞ்சாட்டிய அவர், கம்யூனிஸ்டுகள் கூட்டணியில் இருந்து விலகத் தயார் உள்ளனரா என சவால் விட்டார். ஆனைகட்டியில் வனவிலங்கு வாழ்விடங்களில் ரிசார்டுகள் கட்டப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தில் வாக்குச்சீட்டு சீர்திருத்தம் அவசியம், உழைப்பின் மூலம் பாஜக வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.
Next Story