உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: மனுக்களுக்கு உடனடித் தீர்வு!

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
X
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரங்குடி ஊராட்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சூரங்குடி ஊராட்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல் தலைமையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ஊராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மின்சாரத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத்துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 15 துறைகள் மூலம் 46 அரசு சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இம்முகாமில் மேல்மாந்தை,K.தங்கமாள்புரம், M.சண்முகபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெற்றனர். அவ்வாறு பொது மக்கள் அளித்த மனுக்களில் தகுதியான மனுக்களுக்கு உடனடியாக தீர்வளிக்கும் வகையில் மின்வாரிய அட்டை பெயர் மாற்றம், ரேஷன் அட்டை திருத்தம் உள்ளிட்ட உத்தரவு ஆணைகள் பயனாளிகளுக்கு உடனடியாக வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் மருத்துவ பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலருடன் இணைந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர்.
Next Story