வாணியம்பாடியில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பாதிப்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நேற்று இரவு பெய்த கன மழை காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் பாதிப்பு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் மருத்துவமனைக்குள் செல்ல மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அவ்வழியாகச் செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மழை நீரில் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தகவலின் பேரில் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில் நகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேங்கியுள்ள மழை நீரை மின் மோட்டார் பயன்படுத்தி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக மழைநீர் செல்லும் கால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததே இதற்கு காரணம் எனவும் அதே நேரத்தில் நீர்வழிப் பாதைகளை அதிகளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் இதுபோன்ற சம்பவம் மழைக்காலங்களில் தொடர்ந்து ஏற்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

