திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் வாணியம்பாடி பெரியபேட்டை பாலாற்று கிளை ஆறு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு!

X
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையால் வாணியம்பாடி பெரியபேட்டை பாலாற்று கிளை ஆறு பாலம் உடைந்து போக்குவரத்து துண்டிப்பு! திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர்ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக. பெரியபேட்டை பாலாறின் கிளை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு கோட்டைபகுதியில் இருந்து பெரியபேட்டை பகுதிக்கு இணைக்கும் தரைப்பாலம் சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாணியம்பாடியில் இருந்து பெரியப்பேட்டை கொடையாஞ்சி, அம்பலூர், தேவஸ்தானம், ஈச்சங்கால், சங்கராபுரம், இராமநாயக்கன்பேட்ட, வடக்கப்பட்டு எக்லாஸ்புரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாணியம்பாடி பெரியப்பேட்டை கோட்டை பகுதியை இணைக்கும் தரைப்பாலம் பாலற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளது அருகில் 3 பேஸ் லைன் ஆற்றில் தொங்கியபடி உள்ளதால் ஆபத்தான நிலையில் மின்கம்பங்கள் உள்ளன போக்குவரத்து பாதிப்பு உள்ளாகி உள்ளது
Next Story

