தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசன் நினைவு தினம்

X
தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசன் 80 வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியினர் மரியாதை செலுத்தினர். பட்டியலின மக்களின் உயர்வுக்காக உலக அரங்கில் குரல் எழுப்பிய வரும், ஒருங்கிணைந்த சென்னை மாகாண சட்டப்பேரவையின் உறுப்பினராக 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய ராவ் பகதூர் இரட்டை மலை சீனிவாசன் 80வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வினிஸ்டன் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் ரஜிஷ், இளைஞர் பாசறை நிர்வாகிகள் ரவி, ஓம் பிரகாஷ், உதயா, முத்துராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

