கால்வாய் தூர்வாரும் பணி : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.

X
தூத்துக்குடியில், வடகிழக்கு பருவமழை காலம் நெருங்குவதை முன்னிட்டு, பெரியநாயகிபுரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்பிக் - கிரீன் ஸ்டார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து சுமார் ரூ.2லட்சம் செலவில் மீன்வளக் கல்லூரி அருகே மழைநீர் வடிகாலை தூர்வாரி சீரமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிரீன்ஸ்டார் நிறுவன முழு நேர இயக்குநர் செந்தில்நாயகம், முதுநிலை மேலாளர் ஜெயப்பிரகாஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மணிகண்டன் மற்றும் பெரியநாயகிபுரம் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

