ஜல்லிக்கட்டு கமிட்டி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கிராம கமிட்டி மற்றும் தென்காள் பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. நேற்று மாவட்ட முதலாவது நீதிமன்றத்தில் தனி நபர் சங்கங்கள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை வரவேற்கும் விதமாக அவனியாபுரம் கிராம ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பாக நேற்று (செப்.18)வெடி வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
Next Story