தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சி மொழிப் பயிலரங்கம

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சி மொழிப் பயிலரங்கம
X
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சி மொழிப் பயிலரங்கம்
தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி  மொழிப் பயிலரங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சங்கு கூடத்தில் இரண்டு நாள் நடந்த பயிலரங்கத்தில் அரசு அலுவலர்களுக்கு தமிழ் மொழியில் எப்படி தவறில்லாமல் எழுதுவது என்பது குறித்து பயிற்சி நடந்தது. இரண்டாம் நாள் நடந்த நிறைவு விழாவில் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குனர் வ. சுந்தர் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை வகித்து பேச்சு போட்டியில்  பரிசு பெற்ற மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் கருத்துரையாளர்களாக முத்தாலங்குறிச்சி காமராசு, முடிவைத்தானேந்தல் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் முனைவர் கா.சரவணகுமார் , தொழிலாளர் உதவி ஆணையர் மின்னல்கொடி ஆகியோர்  கலந்துகொண்டனர். முன்னதாக அமர்வில்  ஆட்சிமொழி பயிலரங்கத்தில் உலகத்திருக்குறள் பேரரவை அன்பழகன் பேசினார்.
Next Story