திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழையால் வெள்ளப்பெருக்கு

திருப்பத்தூர் மாவட்டம் நள்ளிரவு பெய்த கன மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான பெரும்பள்ளம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு காட்டியுள்ள தடப்பணை நிரம்பி தமிழகத்தில் புல்லூர் ஊராட்சியில் தொடங்கி திம்மாம்பேட்டை, ராமநாயக்கன் பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, தேவஸ்தானம் வழியாக வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழைநீர் வள்ளத்தை காண வாணியம்பாடி மேட்டுப்பாளையம் இணைக்கும் பாலாறு மேம்பாலத்தின் மீது பொதுமக்கள் வெள்ள நீர் பார்த்து செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆபத்தை உணராமல் பாலாற்று வெள்ளத்தில் வரும் மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

