கிருஷ்ணகிரியில் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

X
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செப்டம்பர் மாத இறுதிக்குள் அரசு நடைமுறைபடுத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் மகாதேவப்ப நாயுடு தலைமை தாங்கினார். இதில் செப்டம்பர் இறுதிக்குள் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிமூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாகவும், உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.
Next Story

