ராணுவ வீரர் உடலுக்கு போலீசார் அஞ்சலி

X
திண்டுக்கல் சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த 8 மதராஸ் ரெஜிமெண்டல் சென்டர்(MRC ) சேர்ந்த ராணுவ வீரர் தாம்சன்(28). இவர் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் மலைச்சரிவில் விபத்தில் படுகாயம் அடைந்து ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார். இவரது உடல் திண்டுக்கல் சிறுநாயக்கன்பட்டியில் அஞ்சலி செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அம்பாத்துரை காவல் நிலையம் சார்பாக சார்பு ஆய்வாளர் அருண்பிரசாத் தலைமையிலான போலீசார் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் தாம்சன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
Next Story

