பரமத்தி வேலூர் சுற்றுவட்டார சிவன் கோயில்களில் பிரதோஷம் விழா.

X
Paramathi Velur King 24x7 |19 Sept 2025 6:29 PM ISTபரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா.
பரமத்தி வேலூர்,.செப்.19: பரமத்தி வேலூர் சுற்றுவட்டார சிவன் கோயில்கலான பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர்,கோப்பணம்பாளையம் ஸ்ரீ பரமேஸ்வரர்,வேலூர் பேட்டை அரசமரத்து சிவன்,நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர்,மாவுரெட்டி வீரட்டீஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதான சிவன் கோயிலில் உள்ள நந்திக்கு பால்,பன்னீர்,சந்தனம்,மஞ்சள்,திருமஞ்சள் மற்றும் திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்பு நந்தி மற்றும் சிவனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
