பரமத்தி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்.

X
Paramathi Velur King 24x7 |19 Sept 2025 6:38 PM ISTபரமத்தி பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை சிறுபான்மையினர் நல ஆணையர் ஆய்வு.
பரமத்திவேலூர், செப்.19: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வியாழக்கிழமை வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இம்முகாமிற்கு பரமத்தி பேரூராட்சி தலைவர் ப.மணி தலைமை வகித்தார்.சேலம் மண்டலம் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குருராஜன், பேரூராட்சி துணைத் தலைவர் ரமேஷ் பாபு, பரமத்தி பேரூர் இளைஞரணி அமைப்பாளர் விக்னேஸ்வரன், துணை அமைப்பாளர்கள் கோபி, ரமேஷ், செல்வகுமார்,பேரூராட்சி உறுப்பினர்கள் நாச்சிமுத்து, கீதா முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ராஜசேகரன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், சிறுபான்மையினர் நல ஆணையருமான ஆசியா மரியம், மற்றும் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி ஆகியோர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பெறப்படும் மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர். மேலும் முகாமில் மனு அளிக்க வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்கள். மேலும், உடனடி தீர்வாக 19 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம் ஆணை, மருத்துவக்காப்பீட்டு அட்டை, தொழிலாளர் நலவாரிய அட்டை, வருமானச் சான்று, முகவரி மாற்றம், பிறந்த தேதி மாற்றம், பிறப்பிடச் சான்று, சொத்துவரி மற்றும் குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல் வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இம்முகாமில் 13 துறை களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து பல் வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) வடிவேல், பரமத்தி வேலூர் தாசில்தார் கோவிந்தசாமி,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கருணாநிதி, பரமத்தி வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், கபிலர்மலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ராஜா, மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கான ஏற்பாடுகளை பரமத்தி பேரூராட்சி இளநிலை உதவியாளர் அண்ணாதுரை தலைமையில் அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
