உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் அமைச்சர் கயல்விழி பங்கேற்பு

X
தாராபுரத்தை அடுத்த நஞ்சியம்பாளையம் ஊராட்சி, குப்பிச்சிபாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதற்கு தாராபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் எஸ்.வி.செந்தில்குமார் தலைமை தாங்கினார். முகாமில், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதே போல் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு அரசு சார்ந்த சான்றிதழ்களை வழங்கினார். இதில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.தனசேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்ட னர்.
Next Story

