ஓடும் பஸ்ஸில் பயனியிடம் நகை திருடிய பெண் கைது

X
உடுமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலையில் இருந்து பல்லடத்திற்கு பஸ்சில் பயணம் செய்தார். அந்த பஸ், பல்லடம் அருகில் வந்தபோது அவர் வைத்திருந்த கைப்பையில் இருந்த 71/2 பவுன் நகைகள் காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பஸ் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நகையை திருடியது வாடிப்பட்டியைச் சேர்ந்த தவமணி என்பவரது மனைவி வசந்தி (வயது 50) என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தபோலீசார் அவரிடம் இருந்து 64 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story

