ஆக்கிரமிப்பு திருமண மண்டபம் சீல் வைப்புபொதுமக்கள் சாலை மறியல்
Komarapalayam King 24x7 |19 Sept 2025 8:28 PM ISTகுமாரபாளையத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பொது மக்களால் பராமரித்து வந்த திருமண மண்டபத்தை இந்து சமய அறநிலைத்துறையினர் பூட்டி சீல் வைத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
குமாரபாளையத்தில் உள்ள வேதாந்தபுரம் பகுதியில் வேதாந்த சிந்தனை சமாஜ மடத்திற்கு சொந்தமான சுமார் ஒன்பது ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக 200 க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த குடியிருப்புப் மையப் பகுதியில் வறண்ட கிணறு ஒன்று இருந்தது இந்த கிணற்றை மூடி அப்பகுதி பொதுமக்கள் விநாயகருக்கு கோவில் ஒன்றும், திருமண மண்டபம் கட்டி கடத்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பராமரித்து வந்தனர். இந்நிலையில் வேதாந்த சிந்தனை சமாஜ மடத்தை சேர்ந்த நிர்வாகிகள், மண்டபம் எங்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ளதால், மண்டபம் எங்களுக்கு சொந்தமானது. நிர்வாகிகள் காலி செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்து வந்தனர் இதனால் இரு தரப்பினருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதால் மடத்தின் நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாடினர். இந்த அடிப்படையில் தனது 2023 ஆம் வருடம் நீதிமன்றம் திருமண மண்டபம் மடத்திற்கு சொந்தமானது என தீர்ப்பளித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமண மண்டப நிர்வாகிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தற்பொழுது விசாரணை உள்ள நிலையில் நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் சுவாமிநாதன் தலைமையில் சித்தி விநாயகர் திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தனர் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் (பொ) சங்கீதா தலைமையிலான போலீசார் சாலை மறியல் செய்த பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மண்டப நிர்வாகிகள் நீதிமன்றத்தை நாடி பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும் என போலீசார் அறிவித்ததின் பேரில், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Next Story



