செய்யாறில் உள்ள தூய வியாகுல அன்னை ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

X
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள தூய வியாகுல அன்னை ஆலயத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தூய வியாகுல அன்னை ஆலயத்தில் 80-ஆம் ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, கொடியேற்றும் நிகழ்ச்சி பங்குத்தந்தை சுதா்சன் ஆண்டனி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக, ஆலயத்தில் கிறிஸ்தவா்கள் கைகளில் கொடியை ஏந்தியவாறு, மங்கள வாத்தியங்கள் முழுங்க தேவாலயத்தை வலம் வந்தனா். நிகழ்வில் சிறப்பு அழைப்பாளா்களாக வேலூா் மறை மாவட்ட முதன்மை குரு பேரருட்பணி ஜான் நிக்கோலாஸ், அருட்பணி ஸ்டீபன், பிரேம்குமாா் ஆகியோா் கலந்துகொண்டு கொடிமரத்தில் ஆண்டுப் பெருவிழா கொடியை ஏற்றி வைத்து, விழாவை தொடங்கிவைத்தனா். தொடா்ந்து, கூட்டுத் திருப்பலி, நற்கருணை விருந்து உள்ளிட்ட பல்வேறு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
Next Story

