கோவையில் தி.மு.க போஸ்டர்களால் பரபரப்பு !

X
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணத்தை விமர்சிக்கும் வகையில் இதுக்கே பயந்தா எப்டி? இனி தான் ஆரம்பம் எனும் வாசகத்துடன் தி.மு.க வினர் கோவை நகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முன்னதாக அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், போஸ்டர்கள் காரணமாக நகரின் அழகு கெடுதலும், மோதல்கள், போராட்டங்கள் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்திருந்தன. இதனால் மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் போஸ்டர்கள் ஒட்டுவதை தடை செய்திருந்தனர். ஆனால் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மீண்டும் சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், அரசியல் கட்சியினர் இடையே பதட்டம் உருவாகியுள்ளது.
Next Story

