போச்சம்பள்ளி அருகே தேங்காய் வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடிய வாலிபர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள பேரூஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகணபதி(45) தேங்காய் வியாபாரம், கடந்த 16-ம்தேதி வீட்டில் பீரேவில் வைத்திருந்த இருந்த 6 பவுன் நகை, 80 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் நாகரசம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து குற்றாவாளியை தேடி வந்தனர். காவேரிபட்டிணட்டிம் அருகே உள்ள வெல்லாரம்பட்டியை சேர்ந்த முத்துகுமார்(26) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, 5 பவுன் நகை மட்டும் பறிமுதல் செய்தனர்.
Next Story

