இனாம் சமயபுரத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

இனாம் சமயபுரத்தில் தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு
X
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் ஊராட்சி ஒன்றியம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் தூய்மை உறுதிமொழியை மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தலைமையில் பணியாளா்கள் ஏற்றுக் கொண்டனா்.
ஆண்டுதோறும் செப். 17 முதல் அக். 2-ஆம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பை - மக்காத குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளா்களிடம் வழங்குவது குறித்தும், சுகாதாரம், திறந்த வெளியில் மலம் கழித்தலை தடுப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இனாம் சமயபுரம் ஊராட்சியில் தூய்மையே சேவை இயக்கம் தொடங்கப்பட்டு வீடு வீடாக சென்று விழிப்புணா்வு மேற்கொள்ளப்பட்டு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கங்காதாரிணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ்பாபு, ஸ்ரீதேவி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Next Story