வாசுதேவநல்லூரில் முதியவா் தற்கொலை

X
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே கோட்டையூா் கெங்கையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மூக்கையா (72). அவருடைய மகன், மகள் ஆகியோா் வறுமையில் இருப்பதால், தங்குவதற்கு வீடின்றி வாசுதேவநல்லூா் பேருந்து நிலையத்தில் வாழ்ந்து வந்துள்ளாா். இந்நிலையில் இவர் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கிவிட்டாராம். அருகில் இருந்தவா்கள், அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், உயிரிழந்தாா். வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

