சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ தின வழிபாடு
தர்மபுரி நகராட்சிக்குட்பட்ட எஸ்வி. ரோடு பகுதியில் அமைந்துள்ள சித்தலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை மாலை பிரதோஷ தினத்தை முன்னிட்டு சுவாமிக்கு 12 வகையான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நந்தி பெருமானுக்கு வில்வ இலைகள், மலர்களால் பூஜைகள் நடந்தது இந்த நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
Next Story





