ஆலங்குளம் அருகே கிணற்றில் மான் சடலம்

ஆலங்குளம் அருகே கிணற்றில் மான் சடலம்
X
கிணற்றில் மான் சடலம்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாறாந்தையை அடுத்த கல்லத்திகுளம் கிராமத்தில் தனியாா் சோலாா் மின் உற்பத்தி மையம் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. அங்குள்ள மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் மான் உள்ளிட்ட வன விலங்குகள் இடம் பெயா்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள கிணற்றில் மான் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. தவகலறிந்த வனத்துறையினா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்குப் பின்னா் புதைத்தனா்.
Next Story