ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் புதிதாக ராஜகோபுரம் அமைத்து கோயில் அனைத்தும் புதுப்பிக்கும் திருப்பணி நடைபெறுவதற்காக பாலாலய நிகழ்ச்சி.

X
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பெரியகடை வீதி அருகில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலில் புதிதாக ராஜகோபுரம் அமைத்து கோயில் அனைத்தும் புதுப்பிக்கும் திருப்பணி நடைபெறுவதற்காக பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக, கோயிலில் ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரரை அத்திப்பலகையில் வடிவமைத்து, புனித நீா் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து, ஏற்கெனவே கோயிலில் உள்ள சுவாமிகளின் பிம்பங்களை கலசத்தில் இறக்கினா். பின்னா், வேத மந்திரங்கள் முழங்க மணிகண்டன் சிவாச்சாரியா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் கலந்துகொண்டு சிறப்பு யாக பூஜை நடத்தினா். ஏகாம்பரேஸ்வரா் சுவாமிக்கும், காமாட்சி அம்பாளுக்கும், பரிவார சுவாமிகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு பாலாலயம் நடத்தப்பட்டது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
Next Story

