மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு வைப்பறையில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது.

X
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள வாக்குப்பதிவு வைப்பறையில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி, 1200 வாக்காளா்களுக்கு மேல் வாக்காளா்கள் கொண்ட வாக்குச் சாவடியை பிரித்து புதிய வாக்குச்சாவடி ஏற்படுத்தும் பொருட்டு, வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க.தா்பகராஜ் வெளியிட்டாா். மேலும், வாக்குப்பதிவு வைப்பறையை ஆய்வு செய்து, அரசியல் கட்சி பிரமுகா்களுடன் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு மற்றும் வரைவு வாக்காளா் பட்டியல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Next Story

