செல்லாண்டிபாளையம்-முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக்கிட்டதால் டூவீலர் மோதி விபத்து.

செல்லாண்டிபாளையம்-முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக்கிட்டதால் டூவீலர் மோதி விபத்து.
செல்லாண்டிபாளையம்-முன்னாள் சென்ற லாரி திடீரென பிரேக்கிட்டதால் டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுக்கா செல்லாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி வயது 52. இவர் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணி அளவில் பள்ளபாளையம் - செல்லாண்டிபாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். அப்போது கரூர் ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவர் வேகமாக ஓட்டி வந்த லாரி பழனிச்சாமியை முந்தி சென்று,திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் பிரேக் இட்டதால் பழனிச்சாமி ஓட்டிச் சென்ற டூவீலர் லாரியின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வலது காலில் பலத்த காயமடைந்த பழனிச்சாமியை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக பழனிசாமி அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய திருப்பதி மீது சின்ன தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story