விவசாயி வீட்டின் மேற்கூைரயை பிரித்து பணம், நகை திருட்டு

விவசாயி வீட்டின் மேற்கூைரயை பிரித்து பணம், நகை திருட்டு
X
விவசாயி வீட்டின் மேற்கூைரயை பிரித்து பணம், நகை திருட்டு ஊதியூர் காவல் துறை விசாரணை
திருப்பூர் மாவட்டம் ஊதியூரை அடுத்த நிழலிகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 70). விவசாயி. நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு குண்டடம் பகுதியில் வசிக்கிற தனது மகள் வீட்டுக்கு சென்றார். பின்னர், நேற்று மதியம் வீட்டுக்கு வந்து, கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. ஓடுகளால் ஆன வீட்டின் மேற்கூரையும் பிரிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மற்றும் 4 பவுன் நகை திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து ஊதியூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட் டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள். பழனிசாமி வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story