நடைபாதையில் மணல் குவியல் அகற்றிய நெடுஞ்சாலை துறையினர்

நடைபாதையில் மணல் குவியல் அகற்றிய நெடுஞ்சாலை துறையினர்
X
ஓரிக்கை மிலிட்டரி சாலையில், நடைபாதையில் உள்ள மணல் குவியலை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்
காஞ்சிபுரம் மாவட்டம் சின்ன காஞ்சிபுரம் பெரியார் நகரில் இருந்து, தேனம்பாக்கம், ஓரிக்கை வழியாக செவிலிமேடு செல்லும் மிலிட்டரி சாலை உள்ளது. கனரக வாகனங்கள் அதிகளவு செல்லும் புறவழிச்சாலையான இது, அகலம் குறைவாக உள்ளதால், தற்போது, விரிவாக்கம் செய்யப்பட்டு, நடைபாதைக்கு சிமென்ட் கல் சாலை அமைக்கப் பட்டுள்ளது. கட்டுமானப் பணிக்காக இவ்வழியாக எம்.சாண்ட் மணல் ஏற்றிச் சென்ற லாரிகளில் இருந்து சிதறிய மணல் நடைபாதையில் குவியலாக உள்ளதால், சாலையோரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மண் குவியலில் நிலைத்தடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்கினர். இதனால், நடைபாதையில் உள்ள மணல் குவியலை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, ஓரிக்கை மிலிட்டரி சாலையில், நடைபாதையில் உள்ள மணல் குவியலை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.
Next Story