பிடியானை குற்றவாளி வரிச்சியூர் செல்வம் கைது

பிடியானை குற்றவாளி வரிச்சியூர் செல்வம் கைது
X
திண்டுக்கல்லில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிடியானை குற்றவாளி வரிச்சியூர் செல்வம் கைது
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே கடந்த 2012-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் வரிச்சியூர் செல்வம்(57) என்பவரை திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து வரிச்சியூர் செல்வம் நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இது தொடர்பாக மாவட்ட S.P.பிரதீப் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வத்தலகுண்டு பகுதியில் பதுங்கி இருந்த வரிச்சியூர் செல்வத்தை கைது செய்தனர்.
Next Story