புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை திருச்செங்கோடு உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள்
Tiruchengode King 24x7 |20 Sept 2025 10:21 AM ISTபுரட்டாசி மாத முதல் சனிக்கிழமை திருச்செங்கோடு உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க குவிந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் சேரும் சகதியாக காட்சி அளித்த உழவர் சந்தை
புரட்டாசி மாதம் பெருமாள் பக்தர்களுக்கு உகந்த மாதம் பெருமாள் பக்தர்களுக்கு புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் இருந்து ஒவ்வொரு வார சனிக்கிழமை யிலும் படையல் இட்டு நான்கு வார சனிக்கிழமைகளிலும் பெருமாளை வழிபடுவது வழக்கம்.ஒரு சிலர் புரட்டாசி மாதத்திற்கு முந்தைய சனிக்கிழமை சேர்த்து 5 வார சனிக் கிழமைகள் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள் புரட்டாசி மாதத்தில் வீடுகளை சுத்தம் செய்து வீடு பூசி மெழுகி அசைவம் உண்ணாமல் பெருமாளுக்கு விரதம் இருந்து புரட்டாசி மாதத்தை கொண்டாடுவார்கள்.முழுமையாக புரட்டாசி மாத விரதம் கடை பிடிக்காதவர்கள் கூட மூன்றாவது சனிக்கிழமை வெகு விமர்சையாக படையல் எட்டி பெருமாளை வழிபட்டு பெருமாள் கோவில்களில் சாமி தரிசனம் செய்ய திரள் வார்கள். முதல் சனிக் கிழமையான திருச்செங்கோடு இன்று உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் திரளாக திரண்டு வந்து இருந்தனர் காய்கறிகளின் விலை எப்பொழுதும் போல் இருந்தபோதிலும் உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சேரும் சக அதிகமாக இருந்தது காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் இதனால் சிரமப்பட்டனர் தொடர்ந்து ஒவ்வொரு நாள் மாலையும் மழை பெய்து வருவதால் இவ்வாறு உழவர் சந்தையில் சேரும் சகதியும் ஆக உள்ளது.
Next Story


