னையூரில் பாண்டியர் கால செயற்கைக் குளம் தடயங்கள் – ஆய்வு கோரிக்கை

X
தூத்துக்குடி தெற்கு குளத்தூர் அருகே உள்ள பனையூர் பகுதியில், சுமார் 4 கி.மீ. விட்டம் கொண்ட பிரம்மாண்ட செயற்கைக் குளம் இருந்ததற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கடற்கரையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் முத்துச்சிப்பி உள்ளிட்ட கடல்சார் புதைபடிவங்கள் பரவலாகக் காணப்பட்டதால், இது பாண்டிய மன்னர்களின் முத்து வணிகத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. வரலாற்று மற்றும் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி நடத்திய கள ஆய்வில், அந்தக் குளம் 3.5 கி.மீ. நீள காயல் மூலம் கடலுடன் இணைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு முத்து வளர்ப்பு நடைபெற்றிருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டுமென ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

