கோவை ரயில்வே தண்டவாளத்தில் குழந்தை பிணம் : ஆறு பேர் கைது !

கோவை ரயில்வே தண்டவாளத்தில் குழந்தை பிணம் : ஆறு பேர் கைது !
X
கோவை ரயில்வே தண்டவாளத்தில் குழந்தை பிணம் கைப்பற்றப்பட்டதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நேற்று சிறையில் அடைப்பு.
கோவை, இருகூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் கடந்த வாரம் ஆண் குழந்தை பிணமாக கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடல் அருகே கோழி, மஞ்சள், எலுமிச்சை இருந்ததால் நரபலி சந்தேகம் எழுந்தது. விசாரணையில், சிங்காநல்லூர் மற்றும் நீலிகோணம் பாளையம் பகுதிகளைச் சேர்ந்த மூன்று தம்பதிகள், உரிய நடைமுறைகள் இன்றி மகாராஷ்டிராவில் இருந்து குழந்தையை பெற்றுக்கொண்டது தெரியவந்தது. குழந்தை உடல்நலக்குறைவால் இறந்ததால், சனிக்கிழமை சம்பிரதாயப்படி கோழி அறுத்து, தண்டவாளத்தில் உடலை விட்டு சென்றதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, மரிய லூயிஸ்-ராதாமணி, பிரவீன் குமார்-கீர்த்திகா, அக்சய்-வைஷாலி உள்ளிட்ட ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர். குழந்தை தத்தெடுப்பு சட்டத்தை மீறுதல், இறந்த உடலை மறைத்தல் மற்றும் அவமரியாதை செய்த குற்றச்சாட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.
Next Story