கன்று குட்டிக்கு தாயான நாய் – கோவையில் இயற்கையின் அதிசயம் !

கன்று குட்டிக்கு தாயான நாய் – கோவையில் இயற்கையின் அதிசயம் !
X
தாய்மையை உணர்த்தும் நாயின் அற்புதம் – கன்று குட்டிக்கு பால் கொடுத்த நாய் கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
கோவை, செல்வபுரம் அருகே உள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடத்தில் தாயை இழந்த கன்று குட்டிக்கு பால் கொடுக்கும் நாய் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு குட்டியை ஈன்ற பசு மாடு உயிரிழந்த நிலையில், தாய் இல்லாமல் தவித்த கன்று குட்டிக்கு, சமீபத்தில் குட்டிகளை ஈன்ற நாய் ஒன்று பால் கொடுத்துள்ளது. இந்த காட்சி அப்பகுதி மக்களால் வீடியோ எடுத்து பகிரப்பட்டு பரவலாக பேசப்படுகிறது. தாயை இழந்த கன்று குட்டிக்கு தாயான நாயின் மனிதநேயம் நிறைந்த செயல், அப்பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Next Story